Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மாநில தேர்தல் ஆணையரிடம் முக.ஸ்டாலின் புகார் ….!!

அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டு  வருவதாக முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.

மு க ஸ்டாலின் பேட்டி நடந்துமுடிந்த இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலையிலிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை  நிலவரத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முந்திக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் எங்களுடைய அணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது , முன்னணியில் இருக்கிறது என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதை எப்படியாவது தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக , அதற்கு துணை இருக்கக்கூடிய அதிகாரிகள் , காவல்துறையினர் துணையோடு திட்டமிட்டு சதி செய்து எப்படியாவது திமுக வெற்றியை தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டமான சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நேரத்தில் இன்னும் முடிவுகள் அறிவிக்காமல்  இருப்பதாக அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட கழக செயலாளர்கள் புகார்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் 800 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் அதே பகுதியில் சில அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் அதை அறிவித்து விட்டு பிறகு தான் இதை அறிவிப்போம் என்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றிருக்கிறார்கள். அதேபோல் கொங்கனாபுரம் ,  எடப்பாடி , சங்ககிரி போன்ற பகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரையில் அறிவிப்பு அறிவிக்கவில்லை. இதில் முதலமைச்சர் உடைய மைத்துனர் திரு வெங்கடேசன் அவர்கள் அவர்தான் வாக்கு எண்ணக்கூடிய மையத்தில் இருந்து கொண்டு ஒரு செல்போன்னை வைத்துக் கொண்டு டைரக்சன் செய்துள்ள அடிப்படையில்தான் அங்கு இருக்கக்கூடிய அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

அதேபோல் திண்டுக்கல் வத்தலகுண்டு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் 112 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதை அறிவிக்க முடியாது என்று அறிவித்து இருக்கிறார்கள்.மீஞ்சூர் ஒன்றிய திமுக வேட்பாளர் 176 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் அதையும் இன்னமும் அறிவிக்கவில்லை. துணை முதலமைச்சர் உடைய மாவட்டமாக இருக்கக்கூடிய தேனி  மாவட்டம் போடி ஒன்றியத்தில் அங்கு திமுக முன்னணியில் இருக்கிறது அதையும் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.தூத்துக்குடி விளாத்திக்குளம் , வந்தவாசி என அனைத்து இடங்களிலும் ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றது. எனவே திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தும் அதிமுகவின் செயலை கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |