காவியா மாறன் ஏலம் கேட்டு ஆர்.சி.பி க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் நேற்று முடிவடைந்தது. இதில் பல முன்னணி வீரர்களை வாங்குவதற்கு கடுமையான போட்டிகள் நடைபெற்றது. சில அணிகள் பட்ஜெட்ல் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்வு செய்த வீரர்களை வாங்க முடியாமல் இருந்தனர். மேலும் ஒரு சிலர் அதிக பட்ஜெட்டில் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தேர்வு செய்த வீரர்களை வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து ஏலம் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேலுக்கு ஏலம் கேட்டு வந்தபோது தான் சன்ரைஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன் ஹர்சலின் விலையை உயர வைத்து ஆர்.சி.பி.க்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்தார். கடந்த சீசனில் ஹர்சல் படேல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி தொடர்ந்து விக்கெட் மழை பொழிந்ததுள்ளளார். மேலும் அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவராக திகழ்ந்தனர்.
இதன் காரணமாக ஆர்.சி.பி. அணி மீண்டும் அவரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மேலும் இவர் ஏலத்திற்கு வந்தபோது மற்ற அணிகள் எதுவும் ஆர்வம் காட்டவில்லை. இவரே வாங்குவதற்காக ஆர்சிபி அணி நிச்சயம் பெரிய தொகையை செலவு செய்யும் என்பதை தெரிந்து கொண்ட சன்ரைசர்ஸ் உரிமையாளரான காவியா மாறன் முடிந்தவரை டப் கொடுத்து ஏலம் கேட்டார். முடிவில் ஹர்சலை ஆர்.சி.பி.அணி 10.75 கோடிக்கு ஏலம் கேட்டது. இதனால் அதிக பட்சம் 2 முதல் 5 கோடிக்கு ஏலம் போகவிருந்த ஹர்சல் படேலுக்கு ஆர்சிபி 10.75 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. மேலும் இதுதான் பின்னடைவாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஹர்சல் படேலை ஆர்சிபி அணி 20 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளது. தற்போது 10.75 கோடி வரை செலவு செய்துள்ளது. ஹர்சலுக்கு 10.75 கோடி செலவு செய்து பிரச்சினையை தானே ஆர்.சி.பி அணி உருவாக்கி கொண்டுள்ளது.