Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : வாக்கு எண்ணிக்கை….. உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு …..!!

வாக்கு எணிக்கை முடிவை உடனடியாக விசாரிக்க திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

இன்று காலை 8 மணியில் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில்  திமுக வெற்றியை தடுக்க அதிமுக அரசு , அதிகாரிகள் , காவல்துறையினர் முயன்று வருகின்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எடப்பாடி , சங்ககிரி , மேட்டூர் , கரூர் உள்ளிட்ட பல பகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவுகள் வெளியிடாமல் இருக்கின்றது. வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலையில் இருந்து வரும் நிலையில் திமுக வெற்றியை நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டி முடிவுகளை அறிவிக்க வேண்டுமென்று அவசர வழக்காக மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் , ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் புதிய விதிமுறைகளின் படியே மதியம் 1.30 மணிக்குள்  மனுவாக பதிவாவதே அவசர வழக்காக விசாரிக்க முடியும். ஆனால் தற்போது மனு தாமதமாக பதிவு செய்யப்பட்டதால் இன்றைக்கு விசாரிக்க சாத்தியமில்லை என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள். இதனால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது.

Categories

Tech |