Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, “அரசு ஊழியர்களுக்கான இடமாறுதல் என்பது பணி நிபந்தனைகளில் ஒன்றாகும். எனவே அரசு ஊழியர்கள் இடமாறுதலை ஒருபோதும் உரிமையாக கோர இயலாது.

திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை உறுதி செய்வது, பொதுநலன் கருதி பணியாளரை இடமாற்றம் செய்வது பொது நிர்வாகத்தின் தனிசிறப்பு. அரசு அறிமுகம் செய்துள்ள கலந்தாய்வு கொள்கை அரசு ஊழியர்களுக்கான தனிச்சலுகை ஆகும். அந்த வகையில் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதவி மற்றும் இடமாறுதலை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படும். எனவே இந்த சலுகையை ஊழியர்கள் ஒருபோதும் உரிமையாக கோர இயலாது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுடைய தகுதியை சரி பார்த்து அதற்கேற்ப அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு பொருத்தவரை நீதித்துறைக்கு மறு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை. எனவே நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. உயர் நீதிமன்றங்கள் அரசுத்துறைகளின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட முடியாது.

எனவே அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கொள்கை முடிவில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் சட்டத்துக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம். மேலும் மனுதாரர் இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தகுதி உள்ளதாகவும், தற்போதைய இடத்தில் ஓராண்டு பணி நிறைவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே அதிகாரிகள் பதிவேடு சரிபார்த்து உரிய முடிவெடுக்க எடுக்க வேண்டும். இந்த மனு பைசல் செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |