Categories
உலக செய்திகள்

“ரஷ்யா எங்ககிட்ட வாலாட்ட கூடாது”…. ஒன்றுதிரண்ட பொதுமக்கள்…. உக்ரேனில் நடக்கப்போவது என்ன?…!!

ரஷ்ய விவகாரத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உக்ரைனின் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது ஒற்றுமையை காட்டும் விதமாக பேரணி நடத்தியுள்ளார்கள்.

ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேன் மீது போர் தொடுப்பதற்கு தேவையான 70 சதவீத படைகளை ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் ரஷ்யா தங்களுக்கு உக்ரேன் மீது படையெடுக்கும் படியான எந்தவித எண்ணமும் இல்லை என்று கூறிவருகிறது. இந்நிலையில் ரஷியாவின் போர் அச்சுறுத்தலை முன்னிட்டு உக்ரேனின் தலைநகரான கைவ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பேரணி நடத்தியுள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று பதாகைகளை கையில் ஏந்தியபடி தங்களது நிலைப்பாட்டை பேரணியில் பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Categories

Tech |