வனப்பகுதியில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரை அருகே உள்ள லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் லோயர்கேம்ப் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் கேரள மாநிலம் மலையபுரம் அருகே இடுக்கி காலனியை சேர்ந்த ஜெய்சன் மேத்யூ(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டார அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.