தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே நிலையம் அருகில் உள்ள கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த சிலர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆற்றில் விழுந்த சரவணனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாற்றுத்திறனாளியான சரவணன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.