சென்னையில் நேற்று (பிப்..13) 1 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூபாய் 4,653 ஆக அதிகரித்தது. அதன்படி நேற்று 8 கிராம் ஆபரணத் தங்கமானது 344 ரூபாய் அதிகரித்து 37,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையில் தூய தங்கத்தின் விலையும் ஏற்றம் கண்டது. அந்த வகையில் 1 கிராம் தூய தங்கம் நேற்று 5,019 ரூபாயாக உயர்ந்தது. 8 கிராம் தூய தங்கம் 344 ரூபாய் உயர்ந்து ரூ.40,152 ஆக இருந்தது. அதேபோன்று வெள்ளி விலையும் நேற்று சற்று அதிகரித்தது. அதாவது நேற்று வெள்ளி ரூபாய் 67.40 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று(பிப்..14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 28 குறைந்து ரூபாய் 4,687க்கு விற்பனையாகிறது. அதுவே சவரனுக்கு ரூபாய் 224 குறைந்து ரூபாய் 37,496க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூபாய் 68.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.