மாற்றுத்திறனாளி சித்தாதிரிபேட்டை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சித்தாதிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இந்நிலையில் சரவணன் நேற்று முன்தினம் காலை ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அதனை கண்ட பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை முயற்சிக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.