Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…. பிப்.15 இரவு முதல் பிப்.16 இரவு வரை தடை…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

பிப்ரவரி 16-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வருவர்.

மேலும் மாசி மாத பௌர்ணமி பிப்ரவரி 15 இரவு 10.30 மணி முதல் நாளை மறுநாள் பிப்ரவரி 16 இரவு 11.30 வரை உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |