தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடத்துக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் அதற்கு பதிலாக தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வெளியானதாக பரபரப்பு புகார் எழுந்தது.
மேலும் இன்று(பிப்…14) 10 ம் வகுப்பிற்கு அறிவியல் மற்றும் 12 ம் வகுப்பிற்கு கணிதம் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அதன் வினாத்தாள்களும் கசிந்து உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.