Categories
சினிமா

விஜய் ரசிகர்களே…. இன்று மாலை 6 மணிக்கு ரெடியா இருங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவானது வெளியிட்டது. அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கள் புரமோவை தொடர்ந்து, இன்று(பிப் 14) மாலை 6 மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியாகவுள்ளதாக ஒரு புகைப்படத்தை இணைத்து படக்குழு அறிவித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

Categories

Tech |