Categories
அரசியல் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பெண் சுயேச்சை வேட்பாளர் மீது தாக்குதல் ….!!

பெண் சுயேச்சை வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திண்டுக்கல் மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவாகிய வாக்குகள் திருச்சி லால்குடி அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு , வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் லால்குடி ஒன்றிய 20_ஆவது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வராணி  வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ,  கடந்த 30ஆம் தேதி நடந்த வாக்குபதிவில் மதியத்துக்கு மேல் வாக்குசீட்டில் என்னுடைய சின்னமோ , பெயரோ இடம் பெற வில்லை.  இதையடுத்து நான் தேர்தல் அதிகாரியிடம் முறையீட்டு 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவை நிறுத்தி வைத்தேன். அதன் பிறகு எனக்கு எந்தவிதமான தீர்வு அளிக்காமல் அதே நிலையில் வாக்குப்பதிவு முடிந்தது

இது தொடர்பாக நான் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்து மறுவாக்குபதிவு செய்யணும் என்று சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். ஆனால் என்னுடைய எந்த ஒரு புகாருக்கு மதிப்பளிக்காமல் தேர்தலை நடத்துவது  , வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பது கேலிக்கூட்டத்தானதாகும் என்று கூறினார்.

இந்நிலையில் வாக்கு என்னும் மையத்துக்கு வந்த சுயேச்சை வேட்பாளர் செல்வராணி வாக்கு எண்ணக் கூடாது என்று சண்டை போட்டதையடுத்து அங்கிருந்த போலீஸாருக்கும் சுயேச்சை வேட்பாளருக்கும் கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் சுயேச்சை வேட்பாளரை கைது செய்து வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |