Categories
மாநில செய்திகள்

கார் ரேஸினால் வந்த வினை…. சூப்பர் மார்கெட்டுக்குள் பாய்ந்து விபத்து…. பெரும் பரபரப்பு…..!!!!!

சென்னை அண்ணா சாலையில் இரவு நேரங்களில் நடைபெறும் கார் ரேசை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அண்ணா சாலையில் நடந்த கார் ரேஸின் போது கட்டுப்பாடை இழந்த கார் சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. இதில் சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த சூப்பர் மார்கெட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு காரில் இருந்தவர்கள் அருகில் இருந்த மற்றொரு காரில் தப்பித்து சென்று விட்டனர். கார் சூப்பர் மார்கெட்டில் மோதியதில் அங்கு இருந்த உரிமையாளர் காயம் அடைந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயம்  அடைந்தவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |