பள்ளி கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கூறியதை கண்டித்து தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ரபிக் தலைமையில் நடைபெற்றுள்ளது, இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கருத்தை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது.
இதில் மாநில பேச்சாளர் திருவாமூர் அப்துர் ரகுமான், மாவட்ட செயலாளர் சாகுல், மாவட்ட பொருளாளர் தீன், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் சித்திக், மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில், சம்சுதின், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் ஹாலித் , கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.