வலிமை திரைப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் அஜித். அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று மிகவும் பிரமாண்டமாக வெளியாகிறது.
இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தை குறித்து பல விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இயக்குனர் ஆத்விக் ரவிதரன் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட ஒரு காட்சி திரை அரங்கயே அதிர வைக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த காட்சியை திரையரங்கில் காண தற்போது ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள்.