தங்கும் விடுதியில் சமையல் மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் சங்கர் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டு செலவிற்கு சங்கர் சரியாக பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது சங்கருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தங்கும் விடுதியில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சங்கரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.