Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய தந்தை-மகன்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மர்ம நபர்கள் இந்த கோவிலின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி 2 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் தாரமங்கலம் பகுதியில் வசிக்கும் உமேஷ் மற்றும் அவரது மகன் திராஜ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கோவிலின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து உமேஷ் மற்றும் திராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |