Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : பாட்னா பைரேட்ஸ் VS தெலுங்கு டைட்டன்ஸ் இன்று மோதல் ….!!!

12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டங்களில் அரியானா அணி 37-26 என்ற கணக்கில் மும்பை அணியையும், பெங்களூரு புல்ஸ் அணி 45-37 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியையும் , குஜராத்  38-31 என்ற கணக்கில் உ.பி.யோதா அணியையும்  வென்றது.
இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன .இதில் பாட்னா அணி 13 வெற்றி, 1 டிரா, 4 தோல்வி என 70 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது இருக்கிறது.இதையடுத்து தெலுங்கு டைட்டன்ஸ் அணி 1 வெற்றி, 4 டிரா , 14 தோல்வி என  27 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.இதனால் பாட்னா பைரேட்ஸ் 14-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இதைதொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி- உ.பி.யோதா அணியும்,இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ்- புனேரி பல்தான் அணியும் மோதுகின்றன.

Categories

Tech |