திருமணம் செய்து வைக்காத கோபத்தில் மகன் தனது தாயை மர கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரூர்பட்டி கிராமத்தில் ராஜா-மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேகர் தனது பெற்றோரை வற்புறுத்தியுள்ளார். அப்போது நீ ஒழுங்காக வேலைக்கு சென்றால் மட்டுமே திருமணம் செய்து வைக்க முடியும் என மணி கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சேகர் மரக்கட்டையால் தனது தாயின் தலையில் ஓங்கி அடித்து நீ செத்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும் என கூறியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.