Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”… 27 வருடங்களுக்கு முன்…. காதலை சொன்ன இடத்திற்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்…!!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் 27 வருடங்களுக்கு முன் தன் காதலியிடம் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்ற நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இங்கிலாந்தில் இருக்கும் Altrincham என்ற நகரத்தில் வசிக்கும் 54 வயதுடைய Dr Jamie Butler-க்கு இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர் தன் மனைவியிடம் சுமார் 27 வருடங்களுக்கு முன் தன் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்று, அங்கு வைத்து மீண்டும் தன் காதலை மனைவியிடம் கூற வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

எனவே, தன் மனைவியை Striding Edge என்ற மலை உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மலை ஏறியதில் அவரின் மனைவிக்கு களைப்பு ஏற்பட்டு ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டார். ஆனால், Butler,  வேகமாக தன் மனைவியிடம் காதலை சொன்ன இடத்தை நோக்கி ஓடினார். அந்த சமயத்தில் அங்கு அதிகமான பனிமூட்டம் இருந்துள்ளது.

தனக்கு முன்பாக சென்ற கணவரை நீண்ட நேரமாகியும் காணவில்லையே, என்று அவரின் மனைவி buttler-ஐ அழைத்திருக்கிறார். அவரிடமிருந்து பதில் சத்தம் வராததால் பதறிப்போன அவர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் மலையின் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டுவிட்டனர். எனினும் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே பரிதாபமாக பலியானார். கால்பந்து அணியின் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கும், அவர் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள்.

இதனால், அவர் தற்கொலை செய்தாரா? என்பதை அறிய நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. எனினும், அவருடைய மருத்துவர் Buttler, தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. தன் மீது ஏற்பட்ட களங்கத்தை நீக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, அவர் தற்கொலை செய்யவில்லை என்றும் மலையிலிருந்து தவறிவிழுந்து தான் பலியானதாகவும் நீதிமன்றத்தின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |