அதிமுகவின் முன்னாள் MP அன்வர் ராஜாவின் மகள் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராக இருக்கக்கூடியவரும் , முன்னாள் MP_யுமான அன்வர்ராஜா மகள் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் போட்டியிட்ட அவரின் மகள் ராவியத்துல் அதரியா வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ச்சியாகவே பின்தங்கி இருந்த நிலையில் 1341 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி 2405 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.