அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரியின் கணவன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய வார்ட்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 2511 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 1307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுகவின் மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரான பரமேஸ்வரியின் கணவர் முருகன் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியின் வாக்கு எண்ணிக்கையின் போது 1204 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.