Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்ரவரி 14) லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து  பிப்ரவரி 15, 16 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அதன்பின் பிப்ரவரி 17, 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |