மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சந்துரு, பூபாலன், ஆகியோருடன் சேர்ந்து காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி பிரகாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகாஷ், சந்துரு, பூபாலன், ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.