நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திக் உடன் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் திரை உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, சூதுகவ்வும், நானும் ரவுடிதான், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பதித்தவர். மேலும் ரஜினி, விஜய் என பல நடிகர்களின் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி உடன் வில்லனாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.
இதற்கு முன் விஜய் சேதுபதி, சுசீந்திரன் இயக்கிய “நான் மகான் அல்ல” திரைப்படத்தில் கார்த்தியின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது வில்லனாக நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜ்மோகன் குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.