Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் பொது கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தேர்தல் நடத்துவதற்கான நடத்தை விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்கும் அடிப்படையில் பிப்ரவரி 19ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை 5 கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 17,18,19ம் தேதி அன்று விடுமுறை அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த விதிமுறையை மீறி செயல்படும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |