உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு பவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நிகழாண்டு விழிப்புணா்வு தினத்தின் முக்கியமான நோக்கம் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம். புற்றுநோய் உறுதியானால் மருந்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்.
Categories