Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

”மனைவி தோற்க கணவன் வென்றார்” உள்ளாட்சி தேர்தலில் சுவாரசியம் …!!

திருச்சி மணச்சநல்லூர் ஒன்றியத்தில் மனைவி தோற்க கணவன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில்  திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியத்தின் 1_ஆவது வார்டில் திமுகவில் போட்டியிட்ட கீதா  ஸ்ரீதர் 1727 பெற்றார். அதே போல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட  குமார் 1859 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அதே வேளையில் கீதாவின் கணவர் ஸ்ரீதர் ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்ட்டில் போட்டியிட்ட  அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை எதிர்த்து போட்டியிட்டு 1307 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மனைவி அதிமுக கூட்டணியிடம் தோற்க , கணவர் அதிமுக கூட்டணியை தோற்கடித்துள்ளார். இது ஒரு சுவாரஸ்ய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |