Categories
உலக செய்திகள்

விலங்குகள் மீதான சோதனைக்கு தடை…. வாக்கெடுப்பில் தெரியவந்த உண்மை…. எதிர்ப்பு தெரிவித்த மருந்து நிறுவனம்….!!

சுவிட்சர்லாந்தில் புதிய மருந்து தயாரிக்க விலங்குகளை பயன்படுத்துவதை  தடை விதித்ததற்கு மருந்து தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து பொதுமக்கள் நான்காவது முறை நிராகரித்துள்ளனர். பொதுவாக மருத்துவர்கள் நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் போது முயல், எலி போன்ற சிறு விலங்குகளை பயன்படுத்தி சோதனை நடத்துவர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வாளர்கள் நடத்திய பரிசோதனைகாக  556,000 மேற்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டதாக அரசு துறையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமின்றி கடந்த 2015 ஆம் ஆண்டை விட மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்துவது 18 % உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டு 60% க்கும் அதிகமானவை அடிப்படை உயிரியல் ஆராய்ச்சியின் போது முன்னெடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விலங்குகளை வைத்து சோதனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தப் பரிசோதனையை ஆதரிப்பவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் முன்னெடுத்து வந்தனர். தற்போது நடந்த வாக்கெடுப்பில் தடை விதிப்பதற்கு ஆதரவாக 20.09% வாக்குகளும் தடை எதும் தேவை இல்லை என 79.1%  மக்களும் தெரிவித்துள்ளனர். இதனிடையே புதிய மருந்துகளை தயாரிப்பதற்கு  விலங்குகள் மீதான ஆராய்ச்சி தேவை என்று மருந்து தயாரிப்பு தொழில் துறை தெரிவித்துள்ளது. இதற்கு தடை செய்ய வேண்டும் என்று சொல்வோர்க்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |