புல்மாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியின் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பிப்ரவரி 26 அன்று பயங்கரவாத முகாம்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்து 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளார். “அதில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன். நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நினைவு கூறுகிறோம். அவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகிறது” என தெரிவித்தார்..