பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சுரேஷ்-வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வசந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.