கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அதனால் பவுர்ணமி முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
தற்போது கொரோன பரவலை தடுக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி முதல் புதன்கிழமை இரவு 11 . 30 மணி வரை கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.