Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொலை செய்ய முயற்சித்த வாலிபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அலத்துறை கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருண்குமார் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் பா. முருகேசன் அதிரடியா அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |