Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. ஓட்டுநர் அளித்த புகார் …. போலீஸ் நடவடிக்கை ….!!

வாலிபரிடம் செல்போன் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேகோபுரம் பகுதியில் ஓட்டுநரான கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலூர்பேட்டை முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர்  கத்தியை வைத்து மிரட்டி கர்ணாகரனிடம்  இருந்த  செல்போனை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருநெல்வேலியை சேர்ந்த ராஜா, பாலகிருஷ்ணன், உலகநாதன், ஆகியோர் செல்போனை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |