அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் பொருட்களை கொண்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் முன்வர் என்பவர் அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கேமிக்கல் சால்ட் 25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ போன்றவற்றை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் முன்வரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த பொருள்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.