ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனது உறவினரான இசையமைப்பாளர் அனிருத்தின் மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதைக்கேட்ட ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உறவினர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரின் பிரிவை கேட்ட ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இக்காரணத்தால் ரஜினி வீட்டில் உள்ளோரிடம் சரியாக பேசாமல் தனிமையில் இருக்கிறார். தற்போது தலைவர்-169 படத்திற்கு பிறகு ரஜினி தன் கவனத்தை படத்தின் மீது திசை மாற்றியுள்ளார். இருப்பினும் ரஜினிக்கு கோபம் குறையவில்லை என தகவல் வருகிறது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிந்ததற்கான காரணம் இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் லதா ரஜினிகாந்த் அனிருத்தின் மீது கோபத்தில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. காரணம் அனிருத் ஐஸ்வர்யாவிடம் காட்டிய நெருக்கம் என பல பேர் கூறி வருகின்றனர். இதனால் லதா ரஜினிகாந்த் அனிருத்தின் மீது கோபம் கொண்டதற்கான காரணமாகயிருக்கிறது. மேலும் தனுஷ் மற்றும் அனிருத் படப்பிடிப்பின்போது தன்னுடன் இணைந்து பணியாற்றும் நடிகைகளுடன் க்ளோசாக இருந்ததுதான் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதுக்கான காரணமாக உள்ளது என லதா ரஜினிகாந்த் அனிருத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.