Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நடைபெற்ற கொடி அணிவகுப்பு…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொறையாறு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த அணிவகுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையிலும், பொறையாறு புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி வரை நடைபெற்றுள்ளது. இதில் மகளிர் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |