Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் தீபிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  வினோத்துக்கு  மனைவி தீபிகாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |