Categories
சினிமா

காதலர் தினம்….!  “நடுரோட்டில் மனைவிக்கு லிப் கிஸ்”…. வெளியான நம்ம வேம்புலியின் ஹாட் போட்டோ….!!!!

ஜான் கோக்கென்-பூஜா ராமச்சந்திரன் தம்பதியினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

மும்பையை பூர்விகமாக கொண்டநடிகர் ஜான் கோக்கென் தெலுங்கு திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் பாகுபலி தி பிகினிங், கேஜிஎஃப், வீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இத்திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே பிரபலமானார். இவர் 2012ஆம் ஆண்டு நடிகை மீரா வாசுதேவன் என்பவரை மணந்து கொண்டார். நடிகை மீரா வாசுதேவனின் முதல் திருமணம் தோல்வியடைந்ததையடுத்து ஜான் கோக்கெனை இரண்டாவதாக மணந்து கொண்டார். ஆனால் இத்திருமணமும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

பிறகு 2019 ஆம் ஆண்டு தொகுப்பாளர் மற்றும் நடிகையான பூஜா ராமச்சந்திரனை காதலித்து மணந்து கொண்டார். பூஜா ராமச்சந்திரனும் ஜான் கோக்கெனை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இருவருமே அவ்வப்போது தங்களுடைய ரொமான்டிக் புகைப்படங்கள் உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு வருகின்றனர். தற்பொழுது பூஜா ராமச்சந்திரன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் காதலர் தினத்தை முன்னிட்டு லிப் கிஸ் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டனர். இப்புகைப்படத்தை பூஜா ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |