Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

தலைவர் 169…. “நெல்சன் தேர்ந்தெடுத்த பிரபல அழகி”…. பட்ஜெட் தாங்காது பா…. கைவிரித்த சன் பிக்சர்ஸ்….!!!

தலைவர்-169 படத்திற்கு ஹீரோயினாக ஐஸ்வர்யாராயை நெல்சன் தேர்ந்தெடுத்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயக்கம்காட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது வசூலில் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு கவனமாக கதை கேட்டு வந்தார். இடையில் தனது மகளான ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து காரணமாக ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனைக் கேட்ட ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக அண்மையில் அதிகாரப் பூர்வமான தகவல் வெளியானது.

இத்திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகை நடிக்கவேண்டுமென ரஜினி கண்டிப்பாக கூறியுள்ளார். இதனால் நெல்சன் திலீப்குமார் தீவிரமாக படத்தின் கதாநாயகியை தேர்வு செய்து வருகிறாராம் . இந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யாராயை தேர்வு செய்திருக்கிறார். இதனால் ஐஸ்வர்யாராயிடம் கலந்துரையாட முடிவு செய்திருக்கிறார் நெல்சன். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனமோ இவரை நடிக்க வைத்தால் படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிடும் என்பதால் தயக்கம்காட்டி வருவதாக செய்தி வெளிவந்திருக்கின்றது.

ஐஸ்வர்யாராய், ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் தலைவர் 169 அறிவிப்பு யூடியூப்பில் வெளியானது. இந்த வீடியோவிற்கு ஒரே நாளில் 3.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இது புதிய சாதனை படைத்திருக்கிறது. இதனால் படத்தின் அப்டேட்டுக்களுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |