Categories
தேசிய செய்திகள்

OMG: 87 வயது மூதாட்டிக்கு நடந்த சோகம்…. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

87 வயது மூதாட்டியை மர்மநபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லியில் உள்ள திலக் நகரில் 87 வயது மூதாட்டி ஒருவர் தனது 65 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  மதியம் 12.30 மணி அளவில் அவரது மகள் வெளியே சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த கைப்பேசியையும் திருடி சென்றுள்ளார்.

இதனை அடுத்து அவரது மகள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது ஆடை கிழிந்தபடி மூதாட்டி அவலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசில், அவரது மகள் செல்போன் திருடப்பட்டதாக மட்டும் முதலில் புகார் கொடுத்துள்ளார். இதன் பின்னர் அந்த மர்ம நபர் மீது  போலீசார் திருட்டு வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று போலீசில் அவரது மகள் தனது தாய்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டதை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் மீது பாலியல் வன்கொடுமை குற்றப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின் போலீசார், உயிர் பிழைத்த மூதாட்டிக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |