திருவெண்காட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்தப் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவனின் 3 கண்களிலிருந்து தோன்றிய தீப்பொறிகளால் 3 குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. அப்படி உருவான குளங்கள் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இத்தகைய சிறப்பு பெற்ற 3 குளங்களில் மாசி மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. மேலும் மேளதாளம் முழங்க அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி முருகன் என்பவர் செய்திருந்தார்.