Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த பாம்பு…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைபாளையம் பிரிவு பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் வழக்கம் போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது கொடிய விஷமுள்ள பாம்பு வீட்டிற்குள் புகுந்ததால் ரத்தினம் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் ரத்தினம் சுதாரிப்பதற்குள் பாம்பு அவரைக் கடித்தது.

இதனையடுத்து ரத்தினத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது ரத்தினம் கீழே வலியால் அலறி கொண்டிருந்தார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் ரத்தினத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |