Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்…. பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூரில் முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கிளை பொருளாளர் பாத்திமா ஜொஹ்ரா தலைமையிலும், கிளை செயலாளர் பாத்திமா நாச்சியா முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. மேலும் கட்சியின் மாநில மகளிரணி பொருளாளர் ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார்.

இதில் ஹிஜாப் அணிய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் கர்நாடகா பா.ஜ.க. அரசை கண்டித்தும், இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் மத்திய அரசு அதை கைவிட வேண்டும் என்றும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |