Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அழகப்பனின் தாய்க்கு மன நலம் பாதிக்கப்பட்டு அவர் காணாமல் போய்விட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த அழகப்பன் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அதன்பின் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அழகப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |