Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 15…!!

பெப்ரவரி 15  கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான்.

706 – பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார்.

1214 – ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர்.

1493 – கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.[1]

1637 – புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.

1690 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

1796 – டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.[2][3]

1798 – முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1865 – இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா ஊடான தந்தி சேவை ஆரம்பமானது.[2]

1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.

1909 – மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.

1920 – யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.[4]

1923 – கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.

1933 – மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: சப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் மோண்ட்டி கசீனோ சண்டை ஆரம்பமானது.

1946 – எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.

1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

1961 – பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட செய்த அனைத்து 73 பேரும் உயிரிழந்தனர்.

1972 – ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார்.

1982 – நியூபவுண்ட்லாந்து தீவில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 84 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.

1989 – ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

1991 – செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.

1994 – உருசியா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

1996 – சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர்.

2001 – முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.

2003 – ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.

2010 – பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர்.

2012 – ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.

2013 – உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1564 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1642)

1748 – ஜெரமி பெந்தாம், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1832)

1820 – சூசன் பிரவுன் அந்தோனி, அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1906)

1858 – வில்லியம் என்றி பிக்கெரிங், அமெரிக்க வானியலாளர் (இ. 1938)

1861 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆங்கிலேய கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1947)

1899 – மணி மாதவ சாக்கியர், கேரளக் கூத்துக் கலைஞர் (இ. 1990)

1922 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் அரசுத்தலைவர்

1923 – சத்தியவாணி முத்து, தமிழக அரசியல்வாதி (இ. 1999)

1931 – மேக்சின் சிங்கர், அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்

1949 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)

1952 – பிரதாப் போத்தன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்

1965 – கிரெய்க் மேத்தியூஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

1982 – மீரா ஜாஸ்மின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்

1145 – இரண்டாம் லூசியசு, திருத்தந்தை

1869 – கலிப், இந்தியக் கவிஞர் (பி. 1796)

1965 – நாட் கிங் கோல், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1919)

1966 – கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ, கொலம்பிய மதகுரு, இறையியலாளர் (பி. 1929)

1973 – டி. கே. சண்முகம், தமிழக நாடகத், திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1912)

1973 – அழகு சுப்பிரமணியம், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர் (பி. 1915)

1974 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர், பாடகர், இயக்குநர் (பி. 1910)

1988 – ரிச்சர்டு பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1918)

2004 – மன்னவன் கந்தப்பு, ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (ஆப்கானித்தான்)

பரிநிர்வாண நாள் (மகாயான பௌத்தம்)

முழுமையான பாதுகாப்பு நாள் (சிங்கப்பூர்)

Categories

Tech |