நாக சைதன்யா தனது முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்தது குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகின்றது.
தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து இரு மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த பிறகு நாக சைதன்யாவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து நீக்கினார் சமந்தா. மேலும் விவாகரத்து செய்யப்போவதாக கூறிய அறிவிப்பையும் நீக்கினார். தற்போது சமந்தா இன்ஸ்டாகிராமில் போட்ட பழைய புகைப்படம் குறித்து பேசப்படுகின்றது.
கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற நடிகர் ராணா மற்றும் மிஹீகா ரோக்கா நிகழ்ச்சியில் எடுத்த நாக சைதன்யாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “என் கணவர் ரொம்ப ஹேண்ட்ஸம் தானே” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு நாகசைதன்யா “இது பணம் கொடுத்து போட்ட பதிவு மாதிரி இருக்கு” என கலாய்த்திருந்தார். இதுபற்றி இணையதளங்களில் பேசப்படுகின்றது. நாகசைதன்யா மற்றும் சமந்தா மீண்டும் சேர வேண்டும் என ரசிகர்கள் எண்ணுகின்றார்கள். இந்நிலையில் சமீபத்தில் பணி நிமித்தமாக இருவரும் ஒரே இடத்திற்கு வந்திருந்தாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எனவே இவர்கள் இருவரும் சேர்வார்கள் என எண்ணுவது கனவாகவே இருக்கும் என்பது தெரியவருகிறது.