விசைத்தறி பட்டறை அதிபர் வீட்டில் மர்மநபர்கள் 35 பவுன் நகை, 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பளையத்தை அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். விசைத்தறி பட்டறை நடத்தி வரும் இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் திரும்பி வவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரன் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த பொது பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், 25 லட்சம் நகைகள் திருடு போயிருந்துள்ளது.
இதுகுறித்து மாதேஸ்வரன் உடனடியாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதேஸ்வரன் வீட்டை பார்வையிட்டு, கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களையும் சேகரித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் திட்டம்போட்டு மாதேஸ்வரன் வெளியே சென்ற நேரத்தில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.