விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று எந்த செயலுமே நீங்க ரொம்ப நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை மனதார பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். கலைத்துறைனருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியமுமே உங்களுக்கு இன்று நல்லபடியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனைக் கொடுக்கும்.
வாகனங்களை ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கை அவசியம். வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். ஆகையால் நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம். உங்களுடைய நல்ல கடமையை நீங்கள் செய்து பாருங்கள் அதற்கான பலனை உங்களுக்கு கண்டிப்பாக இறைவன் கொடுப்பார். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெற கூடும். ஆசிரியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். சக மாணவனிடமும் நீங்கள் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்